» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜெய்ப்பூரில் நீட் தேர்வு வினாத்தாள் ரூ.10 லட்சத்திற்கு விற்பனை: முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது
செவ்வாய் 14, செப்டம்பர் 2021 5:20:29 PM (IST)
ஜெய்ப்பூரில் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெய்பூரில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்வு தொடங்கியதும் தேர்வறை கண்காணிப்பாளரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர், வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து சித்ரகூட் பகுதியில் தங்கியிருந்த 2 பேருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளனர்.
அந்த நபர்கள் சிகார் பகுதியில் வேறு சிலருக்கு வினாத்தாளை அனுப்பி, அவர்கள் மூலம் சரியான விடைகளைப் பெற்றுள்ளனர். அங்கிருந்து முகேஷுக்கு விடைகள் கிடைக்க, அதனை வாட்ஸ்-அப் மூலம் பெற்ற ராம் சிங் தினேஷ்வரி குமாரி என்ற மாணவிக்கு விடைகளைத் தெரிவித்துள்ளார். இதற்காக ரூ.35 லட்சம் பேரம் பேசப்பட்டு, தேர்வுமைய வளாகத்திலேயே 10 லட்ச ரூபாய் கைமாறியுள்ளது. இதையடுத்து தேர்வு மைய அதிகாரி, மாணவி உட்பட 8 பேரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 29, ஜனவரி 2026 5:23:49 PM (IST)

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!
வியாழன் 29, ஜனவரி 2026 12:46:13 PM (IST)

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொன்ற நர்ஸ் கைது!
வியாழன் 29, ஜனவரி 2026 8:24:37 AM (IST)

அஜித் பவார் விமான விபத்து குறித்து உரிய விசாரணை : மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!
புதன் 28, ஜனவரி 2026 4:08:44 PM (IST)

விமான விபத்து: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு!
புதன் 28, ஜனவரி 2026 10:24:59 AM (IST)

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம்
செவ்வாய் 27, ஜனவரி 2026 5:28:13 PM (IST)

