» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
படகில் போட்டோ ஷூட் : மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக டி.வி நடிகை கைது!
திங்கள் 13, செப்டம்பர் 2021 10:58:54 AM (IST)
கேரளத்தில் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலுக்கு விரதமிருக்கும் பக்தர்கள் மட்டும் செல்லும் படகில் போட்டோ ஷூட் நடத்திய டி.வி நடிகை கைது செய்யப்பட்டார்.

கடுமையாக விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே இப்படகில் செல்ல முடியும். இது ‘பள்ளி ஓடம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் படகில் ஏறுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள டி.வி நடிகை நிமிஷா இப்படகில் ஏறி போட்டோ ஷூட் நடத்தினார். காலில் ஷூ மற்றும் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட் அணிந்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நிமிஷா, தனக்கு இதன் பாரம்பரிய பெருமை தெரியாது என்று கூறி மன்னிப்பு கேட்டார்.
இதற்கிடையே மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி, ஆரன்முளா கோயில் நிர்வாகிகள் ஆரன்முளா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் நிமிஷா மற்றும் அவருக்கு உதவி செய்த உன்னி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பிறகு விசாரணைக்காக நிமிஷா, உன்னி இருவரும் ஆரன்முளா காவல் நிலையத்தில் ஆஜரானார்கள். விசாரணைக்குப் பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய தொழிலதிபர்களின் அமெரிக்க விசா ரத்து : தூதரக அதிகாரி அறிவிப்பு
வெள்ளி 19, செப்டம்பர் 2025 10:46:00 AM (IST)

அயோத்தி ராமர் கோவிலில் அணிலுக்கு பிரம்மாண்ட சிலை!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 8:44:47 AM (IST)

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: நிதிஷ் குமார் அறிவிப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:58:15 PM (IST)

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுண்ட்டரில் கொலை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:31:54 AM (IST)

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)
