» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு தினம்: பிரதமர் மோடி புகழஞ்சலி
சனி 11, செப்டம்பர் 2021 10:37:37 AM (IST)
மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழஞ்சலி சூட்டியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு தினம் இன்று. பிரதமர் மோடி அடிக்கடி பாரதியின் பாடல்களை மேற்கோள் காட்டி உரையாற்றுவது வழக்கம்.அந்த வகையில் பாரதியாரின் நினைவு தினமான இன்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது: சிறப்பு வாய்ந்த சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துகிறேன். இந்த நினைவு தினத்தில் அவரது பெரும்புலமையை நினைவு கூர்வோம். அவரது பெரும்புலமை, நாட்டுக்கு ஆற்றிய பன்முகப்பங்களிப்பை நினைவில் கொள்வோம். சமூகநீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளையும் இந்த நாளில் நினைவில் கொள்வோம். இவ்வாறு அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பனிமூட்டத்தால் விமானம் ரத்தானால் கட்டணம் திருப்பி செலுத்தப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:36:29 PM (IST)

சிறிய பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைக்க மத்திய அரசு திட்டம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 11:07:37 AM (IST)

இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை ஒளிரச் செய்தார்: பாரதிக்கு பிரதமர் மோடி புகழாரம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:56:32 AM (IST)

யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி வரவேற்பு
புதன் 10, டிசம்பர் 2025 4:22:25 PM (IST)

வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்? திருச்சி சிவா கேள்வி
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:40:32 PM (IST)

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மான கடிதம் வழங்கிய இண்டியா கூட்டணி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:11:33 PM (IST)


.gif)