» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சத்தீஷ்காரில் ஊரடங்கில் தளர்வு: ஓராண்டுக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு

திங்கள் 2, ஆகஸ்ட் 2021 10:18:31 AM (IST)

சத்தீஷ்காரில் கரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் ஓராண்டுக்கு பின் சில பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கரோனா பரவலை முன்னிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலானது.  இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.  பல மாநிலங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், கரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  சத்தீஷ்காரிலும் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனை முன்னிட்டு சத்தீஷ்காரின் ராய்ப்பூர் நகரில் உள்ள சில பள்ளிகள் ஓராண்டுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.  இதனை முன்னிட்டு மாணவ மாணவியர் சீருடை அணிந்து, முக கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகளுக்கு செல்கின்றனர்.  நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிக்கு செல்வதா மகிழ்ச்சி அடைவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory