» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை செலுத்திக் கொண்டார் பிரதமர் மோடி!

வியாழன் 8, ஏப்ரல் 2021 12:48:21 PM (IST)பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) எடுத்துக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் சுட்டுரை பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:  தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) வியாழக்கிழமை காலை எனது இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்.  தொற்றை தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசி உள்ளது.  தடுப்பூசியை எடுத்துக்கொள்வதற்கு தகுதியுடையவராக நீங்கள் இருந்தால், விரைவில் உங்களுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

தில்லி எய்ம்ஸில் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் இரண்டு செவிலியர்கள் ஈடுபட்டனர். அவர்களில், புதுச்சேரியைச் சேர்ந்த பி.நிவேதா மற்றும் பஞ்சாபை சேர்ந்த நிஷா சர்மா. இதுகுறித்து நிஷா சர்மா கூறுகையில், கோவாக்சின் இரண்டாவது டோஸை வியாழக்கிழமை காலை தில்லி எய்ம்ஸில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளேன். அவர் எங்களிடம் பேசினார். அவரைச் சந்தித்து அவருக்கு தடுப்பூசி செலுத்தியது எனக்கு ஒரு மறக்கமுடியாத தருணம் என்று நிஷா சர்மா தெரிவித்தார். 

முன்னதாக பிரதமர் மோடி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் தனது முதல் டோஸை மார்ச் 1 ஆம் தேதி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. நாட்டில் தற்போது வரை 9 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இந்தியாவில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கோவோக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. நாட்டில் கரோனா தடுப்பூசியின் முதல் கட்ட பயன்பாட்டை ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory