» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.. - மத்திய அமைச்சர்

வியாழன் 8, ஏப்ரல் 2021 12:32:58 PM (IST)கரோனா தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று தடுப்பூசியின் 2வது டோஸை செலுத்திக் கொண்ட பின்னர் கருத்து தெரிவித்தார். 

இந்தியாவில் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அதனை தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கடுத்ததாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதோடு, மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன் முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிரதமர் மோடி, தடுப்பூசியின் 2வது டோசை இன்று செலுத்தி கொண்டார்.  

அதே போல மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சில வாரங்களுக்கு முன் டெல்லி ராம் மனோகர் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இதனையடுத்து இன்று அவருக்கு தடுப்பூசியின் 2வது டோஸ் போடப்பட்டது.

தடுப்பூசியை செலுத்திக் கொண்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நாம் நோயை குறித்து அச்சம் கொண்டிருக்க வேண்டும், ஆனால் தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான வயதுடையவர்களாக இருந்தால், இன்றே பதிவு செய்து கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory