» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை: மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!
வியாழன் 8, ஏப்ரல் 2021 10:57:18 AM (IST)
கரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று (ஏப். 8) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையைப்போல இல்லாமல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால் இப்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. அதுவும் 3 நாளில் 2 முறை 1 லட்சத்தை கடந்துள்ளது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.மராட்டியம், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி, அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 6-ம் தேதியன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
குபேரன்Apr 8, 2021 - 12:25:31 PM | Posted IP 162.1*****
ஆமா நீங்க எப்போ ரிவர்ஸ் கியர் ல இருந்து Forward கியர் போட்டு நாட்ட முன்னேற்ற போறீங்க? உங்க திறமையில் ரொம்ப பின்னாடி போய் விட்டது இந்தியா. Gear விழ மாட்டேன் என்று அடம் பிடித்தால் காங்கிரஸ் யிடம் கொடுத்து விட்டு Rest எடுங்கள் Please.... அவர்கள் எப்போதும் Forward கியர் ல தான் நாட்டை யிட்டு செல்வார்கள்.
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவிற்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும்: பினராயி விஜயன் கோரிக்கை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:44:03 PM (IST)

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்பு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:22:18 PM (IST)

மம்தா பானா்ஜி பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை : தோ்தல் ஆணையம் உத்தரவு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 10:28:14 AM (IST)

கரோனா 2ஆம் அலை தீவிரம் : உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு உணவு வழங்க கட்டுப்பாடு
திங்கள் 12, ஏப்ரல் 2021 5:46:18 PM (IST)

ரஷ்யாவின் கரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
திங்கள் 12, ஏப்ரல் 2021 5:18:18 PM (IST)

கர்நாடகத்தில் தேவை ஏற்பட்டால் பொதுமுடக்கம் அமல் : முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு
திங்கள் 12, ஏப்ரல் 2021 3:48:20 PM (IST)

கை தட்டு , விளக்கு புடிApr 9, 2021 - 09:06:37 AM | Posted IP 162.1*****