» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதன் 7, ஏப்ரல் 2021 3:32:01 PM (IST)

கரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

இது தாெடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தடுப்பூசிகளை அதிகளவு கொள்முதல் செய்து அனைத்து வயதினருக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட கரோனா தடுப்பூசி இயக்கத்தில் முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory