» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் தடுப்பூசிகள்: பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு உத்தரவு

ஞாயிறு 7, மார்ச் 2021 9:13:14 AM (IST)

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள், தடுப்பூசிகள் போடுவதை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பாதிப்பு அதிகரிக்காவிட்டாலும்கூட, பல மாநிலங்களில் அதிகமாக உள்ளது. குறிப்பாக அரியானா, ஆந்திரா, ஒடிசா, கோவா, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகார் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சமீப காலமாக கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த மாநிலங்களின் சுகாதார துறை செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார திட்ட இயக்குனர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வினோத் கே பால் ஆகியோர் நேற்று காணொலி காட்சி வழியாக முக்கிய ஆலோசனை நடத்தினர். கரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், பாதிப்பு உறுதி செய்யப்படுகிற ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருந்த 20 பேரையாவது கண்டறிய வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டது. கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.

‘டெஸ்ட், டிராக், டிரீட்’ (கரோனா பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை) என்பதில் இந்த மாநிலங்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் உள்ள குழுவினருக்கு தடுப்பூசிகளை போடுவதை விரைவுபடுத்த வேண்டும், குறைந்தது 15 நாள் முதல் அதிகபட்சம் 28 நாள் வரையிலான தடுப்பூசி அட்டவணையை தயார் செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory