» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: குடியரசு தலைவர் திறந்து வைத்தார்

புதன் 24, பிப்ரவரி 2021 5:26:07 PM (IST)அகமதாபாத்தில் நவீன் வசதிகளுடன் கட்டப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த மைதானத்தில் முதல் போட்டியாக இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு மற்றும் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து, அகமதாபாத்தின் மோட்டேராவில் சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி பூமி பூஜை செய்தனர். அகமதாபாத் சபர்மதி நதிக்கரை ஓரம் கடந்த 1982ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சர்தார் வல்லபாய் படேல் மோதிரா மைதானம் கடந்த 2015ம் ஆண்டு இடிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. மோட்டேரா ஸ்டேடியம் என்று இருந்த பெயரை "நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த மைதானம் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய மைதானத்தில் அதிநவீன வசதிகள் உள்ளன. பயிற்சிக்கென தனித்தனியே 2 மைதானங்கள் பெவிலியனுடன் அமைக்கப்பட்டுள்ளது. 49,000 ரசிகர்கள் அமரும் வகையில் இருந்த இந்த மைதானம் தற்போது ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. 8 செ.மீ. மழை பெய்தாலும் கூட அடுத்த சில மணி நேரத்தில் போட்டியை நடத்தும் வகையில் வடிகால் வசதி உள்ளது. மின்விளக்கு கோபுரங்களுக்கு பதிலாக மேற்கூரைகளின் விளிம்பில் எல்இடி விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதனால் மைதானத்தில் நிழல் விழாது. 4 டிரஸ்சிங் ரூம், நீச்சல் குளம், பிரமாண்ட உணவகம் உள்ளிட்டவை உள்ளன.


மக்கள் கருத்து

நான் தமிழன்Feb 25, 2021 - 07:58:37 AM | Posted IP 162.1*****

வட நாட்டு குஜராத்திக்காரன் பூரா திருட்டு பயலுக நம்ம GST பணத்தை ஆட்டை போட்டு கட்டினது, மதுரையில் வெறும் செங்கல் , மக்கள் என்ன முட்டாளா??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory