» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமானம் இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி
செவ்வாய் 23, பிப்ரவரி 2021 3:49:29 PM (IST)
இலங்கை செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விமானம் இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி பிரதமர் மோடிக்கு அனுமதி மறுப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனாலும் சர்வதேச விதிகளின்படி இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் விமானம் பறக்க இந்தியா அனுமதி வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய தலைவர்கள் செல்லும் விமானங்கள் சர்வதேச வான்வெளியை பயன்படுத்த அனுமதி வழங்குவது வழக்கமான ஒன்றாகும்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது இலங்கை சுற்றுப்பயணத்தில் அந்தநாட்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதாக இருந்தது. ஆனால் அந்த உரை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக இலங்கை அறிவித்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இம்ரான்கான் உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக இலங்கை தெரிவித்தது. ஆனால் இலங்கை பாராளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான்கான் பேசினால் இந்தியாவுடன் மனக்கசப்பு ஏற்படும் என்பதால் உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்: மம்தா பானர்ஜி
வியாழன் 25, பிப்ரவரி 2021 10:35:34 AM (IST)

திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி தங்க சங்கு- சக்கரம் : தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார்
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:49:52 AM (IST)

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: குடியரசு தலைவர் திறந்து வைத்தார்
புதன் 24, பிப்ரவரி 2021 5:26:07 PM (IST)

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதன் 24, பிப்ரவரி 2021 4:59:08 PM (IST)

இந்திய டாக்டர்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரிக்கும் : பிரதமர் மோடி பெருமிதம்
புதன் 24, பிப்ரவரி 2021 8:42:54 AM (IST)

காவிரி-வைகை இணைப்பு திட்டத்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு: தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டம்
புதன் 24, பிப்ரவரி 2021 8:41:00 AM (IST)
