» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்கம், மேகாலயா உள்பட 4 மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைப்பு!!

திங்கள் 22, பிப்ரவரி 2021 5:24:55 PM (IST)

மேற்குவங்கம், மேகாலயா உள்பட 4 மாநிலங்கள் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைந்து மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல்- டீசலின் அடக்கவிலை குறைவாகவே இருந்த போதிலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் அதிகளவிலான வரி விகிதத்தை விதித்து இருப்பதால், இவற்றின் விலை மிக அதிகமாக இருக்கிறது. இந்தநிலையில் சமீப காலமாக எண்ணை நிறுவனங்கள் கச்சா எண்ணை விலை உயர்வை காரணம் காட்டி தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இதனால் தற்போது பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 92 ரூபாயையும், டீசல் விலை 85 ரூபாயையும் தாண்டி விற்று வருகிறது. சில மாநிலங்களில் உள்ளூர் வரி அதிகமாக இருப்பதால் பெட்ரோல் விலை 100 ரூபாயையும் தாண்டி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்யால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் சில மாநிலங்கள் தங்கள் மாநில வரியை குறைத்து வருகின்றன. 

அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் அதன் மாநிலத்தின் வாட் வரியை 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக குறைத்துள்ளது. அசாம் மாநிலத்தில் கரோனாவுக்காக கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருந்தது. அதை அந்த மாநில அரசு அதில் 5 ரூபாயை குறைத்துள்ளது. மேற்குவங்க அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் வரியை குறைத்து இருக்கிறது. மேகாலய மாநிலத்தில் மிக அதிகபட்சமாக வரி குறைப்பு செய்துள்ளனர். அந்த மாநிலத்தில் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 31.62 சதவீத வரியை 20 சதவீதமாகவும், டீசல் விதிக்கப்பட்ட 22.95 சதவீத வரியை 12 சதவீதமாகவும் குறைத்துள்ளனர். 

இதனால் அங்கு பெட்ரோல் ரூ.7.40-ம், டீசலுக்கு ரூ.7.10-ம் விலை குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு இதுவரை 4 மாநிலங்கள் தங்கள் மாநில வரியை குறைத்து இருக்கின்றன.மத்திய அரசு கரோனா நிதி தேவைக்காக பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரியை ஏற்கனவே விதித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை பெட்ரோலுக்கு 13 ரூபாயும், டீசலுக்கு 16 ரூபாயும் உயர்த்தப்பட்டு இருந்தன. ஆனால் அந்த வரியை இதுவரை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory