» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மனைவி பிரிந்து சென்றதால் 18 பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது

வியாழன் 28, ஜனவரி 2021 12:19:40 PM (IST)

ஐதராபாத்தில் மனைவி பிரிந்து சென்றதால் 18 பெண்களை கொலை செய்த கொடூர சீரிய கொலைகாரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சமீபத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில், ஐதராபாத்தை சேர்ந்த மைனா ராமுலு என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் மீது ஏற்கனவே 16 கொலை வழக்குகள் உட்பட 21 வழக்குகள் உள்ளன. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் தனது மனைவி பிரிந்து சென்ற பிறகு, ஆத்திரத்தில் தொடர் கொலைகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

பெண்களை ஏமாற்றி அவர்களின் வீட்டுக்கு செல்லும் மைனா ராமுலு, அவர்களுடன் மது அருந்திய பின் அவர்களை கொலை செய்து வந்தது தெரியவந்துள்ளதாக ஐதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். 2003ம் ஆண்டு முதல் அந்த நபர் 18 பெண்களை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory