» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை : விவசாயி பலி - 83 போலீசார் காயம்

செவ்வாய் 26, ஜனவரி 2021 9:42:04 PM (IST)வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 83 போலீசார் காயமடைந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் 11 கட்டமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் தடுப்புகளை மீறி டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்த நிலையில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் டெல்லி எல்லை வன்முறைகளமாக காட்சியளித்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் டிராக்டர் பேரணியின் போது விவசாயிகளுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக 83 காவலர்கள் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

kumarJan 27, 2021 - 01:21:38 PM | Posted IP 162.1*****

en thai thiru nattu thesiya kodiyai irakki pirivinai vatha kodiyai sengkotayil etriya ivargal vivasayigala? thesa throgigal....ivargalai irumbu karm kondu arasu adakkavendum..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory