» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

செவ்வாய் 26, ஜனவரி 2021 11:36:08 AM (IST)

நாட்டின் 72-வது குடியரசு நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, புது டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்.

சிறப்பு விருந்தினர்கள் இன்றி புது டெல்லி ராஜ்பாத்தில், நாட்டின் 72-வது குடியரசு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எம்ஐ 17வி5 ரக ஹெலிகாப்டர் தேசியக் கொடியுடன் வானில் பறந்தது. முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். குடியரசு நாள் விழாவில் இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு, துணை ராணுவப் படை வீரர்கள், டெல்லி காவல்துறையினரின் வீரநடை, தேசிய பாதுகாப்புப் படை வீரர்களின் உற்சாக அணிவகுப்பும், எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒட்டக அணிவகுப்பு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் அரசமைப்புச் சட்டம் கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1966-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையான வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் இன்றி குடியரசு நாள் விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பொதுவாக புது டெல்லி ராஜபாதையில் 8.50 கிலோ மீட்டருக்கு அணிவகுப்பு நடத்தப்படும். ஆனால் இந்த முறை 3.50 கிலோ மீட்டருக்கு மட்டுமே அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக குடியரசு நாள் விழா நிகழ்ச்சிகளை பார்வையிட 4,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory