» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விவசாயிகள் மரணத்தைப் பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை : ராகுல்காந்தி விமர்சனம்

புதன் 13, ஜனவரி 2021 5:01:14 PM (IST)

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளில் 60 பேர் இறந்தபோது வராதக் கவலை அவர்களின் டிராக்டர் பேரணியால் மத்திய அரசுக்கு வருகிறது என காங்கிரஸ் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான தில்லியில் நடந்து வரும் போராட்டமானது 50 நாள்களை நெருங்கி உள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, " வேளாண் சட்ட போராட்டத்தில் 60 விவசாயிகள் உயிரிழந்தபோது மத்திய அரசுக்கு வராத கவலை அவர்களின் டிராக்டர் பேரணியால் வந்துள்ளது” என விமர்சித்துள்ளார். கடந்த ஜனவரி 7ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory