» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : தேவசம் போர்டு

செவ்வாய் 12, ஜனவரி 2021 5:19:41 PM (IST)

சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை பார்க்க 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது.  பிரசித்தி பெற்ற மகர ஜோதி தரிசனம் நாளை மறுநாள் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அன்று பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார். இதனை காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். இப்போது கொரோனா பிரச்சினை காரணமாக தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மகர ஜோதி தரிசனத்தை பார்க்கவும் சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்து உள்ளார்.மகர ஜோதிக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில் 50 பக்தர்களுக்கே திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory