» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ. 200: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவிப்பு

திங்கள் 11, ஜனவரி 2021 8:37:20 PM (IST)

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ. 200 என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசிக்கான விலையினை, அதனை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு முதற்கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் ஒரு தடுப்பூசியின் விலை ரூ. 200 என நிர்ணயித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பும் பணி நாளை காலை தொடங்கும் என்றும் சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் மத்திய அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தனியாருக்கு தடுப்பூசிகளை வழங்கும் பட்சத்தில் இதைவிட அதிகமான விலைக்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும் 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும், அதையடுத்து 50 வயதைக் கடந்தோா், இணைநோய் உள்ள 50 வயதுக்குக் குறைவான நபா்கள் என மொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory