» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தோனேசியா விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

ஞாயிறு 10, ஜனவரி 2021 6:35:40 PM (IST)

இந்தோனேசியா விமான விபத்து சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணிகள் தொடங்கியது. இதற்கிடையில், விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.ஜாவா கடலில் விமானத்தின் உடைந்த பாகங்கள், பயணிகள் சிலரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, விமானத்தின் பாகங்களை தேடுதல், பயணிகள் நிலை குறித்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. விமானம் கடலில் விழுந்து 24 மணி நேரத்திற்கும் மேலானதால் அதில் பயணித்த 62 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதைதொடர்ந்து இந்தோனேசிய விமான விபத்துக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இந்தோனேசியாவில் எதிர்பாராத விதமாக நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துக்கமான நேரத்தில் இந்தோனேசியாவுடன்
இந்தியா துணைநிற்கும்’ என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory