» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் - கர்நாடக அரசு

ஞாயிறு 10, ஜனவரி 2021 6:32:18 PM (IST)

ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக அரசு புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது.

கர்நாடகாவில் ஏழை பிராமண சமுதாய முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து உள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநில பிராமணர்கள் மேம்பாட்டு வாரியத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது. இந்த வாரியம் புதிதாக இரண்டு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இதற்கான பயனாளிகள் அளவுகோலாக‌ 8 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஏக்கர் நிலமும் நிர்ணயிக்கப்பட்டது. அருந்ததி, மைத்ரே என்று இந்த திட்டங்களுக்கு பெயரும் வைத்தது. அருந்ததி திட்டத்தின் கீழ், திருமணமாகும் பிராமண பெண்ணின் குடும்பத்திற்கு, கல்யாணத்திற்காக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

அதேபோல் மைத்ரேய் திட்டத்தில், பிராமண சமூகத்திற்குள் பிராமண சமூக மணமகள் அர்ச்சகரை கல்யாணம் செய்து கொண்டால் ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த பணம் 3 தவணைகளாக அவர்களுக்கு வழங்கப்படும். 4 வது, வட்டியும் அந்த பெண் முழு பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

அருந்ததி திட்டத்தின் கீழ், 550 குடும்பங்களும், மைத்ரேய் திட்டத்தின் மூலமும் 25 குடும்பங்களும் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது. 1,000 சதுர அடிக்கு அதிகமான வீடு இருக்கக் கூடாது.  அவர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்றும் வரையறைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory