» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மன்மோகன் சிங் பிறந்தநாள் : பிரதமர் மோடி வாழ்த்து

சனி 26, செப்டம்பர் 2020 11:47:26 AM (IST)இன்று பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்நாள் பிரதமர் மோடி சுட்டுரை வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்க இறைவனை நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

2004ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரண்டு முறை நாட்டின் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் இன்று தனது 88வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.இவர் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்படுவதற்கு முன்பு பாஞ்சாப்பைச் சேர்ந்த கஹ் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் பஞ்சாப் பல்கலைக்கழகம், காம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களிலும் பட்டம் பெற்றவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory