» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக பங்களிப்பு : கேரள அரசுக்கு ஐ.நா. விருது

வெள்ளி 25, செப்டம்பர் 2020 12:54:59 PM (IST)

தொற்றில்லா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்காக கேரளாவுக்கு ஐ.நா. விருது வழங்கப்படுகிறது.

தொற்றில்லா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்காக கேரளாவுக்கு இந்த ஆண்டுக்கான ஐ.நா. விருது வழங்கப்படுகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிவித்துள்ளார். உலகம் முழுவதுமுள்ள 7 சுகாதார அமைச்சகங்களில் கேரளாவும் தேர்வு பெற்றுள்ளது.  நோய் கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் இலவச சேவை ஆகிய பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கேரளா இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஆண்டு தோறும் இதற்காக சில நாடுகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு ரஷ்யா, பிரிட்டன், மெக்சிகோ, நைஜீரியா, அர்மேனியா போன்ற நாடுகளுடன் கேரள சுகாதார அமைச்சகமும் தேர்வு பெற்றுள்ளது. இதுதொடர்பாக கேரள சுகாதார துறை மந்திரி சைலஜா கூறும்பொழுது, கொரோனா பாதிப்புள்ள காலங்களில் இறப்பு விகிதங்களை கட்டுப்படுத்தி உள்ளோம்.  தொற்றில்லா நோய் மீதும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தினோம்.  சுகாதார துறையில் அயர்வின்றி சேவை செய்ததற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory