» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலியல் குற்றவாளிகளின் படங்களை சாலை சந்திப்புகளில் வைக்க யோகி ஆதித்யநாத் உத்தரவு

வெள்ளி 25, செப்டம்பர் 2020 12:49:12 PM (IST)

உ.பி.யில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை அவமானப்படுத்தும் வகையில் அவர்களது புகைப்படங்களை சாலை சந்திப்புகளில் வைக்க காவல்துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, ஈவ் டீசிங் செயல்களில் ஈடுபடுவோர், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபடுவோர் ஆகியோரை அவமானப்படுத்தும் வகையில், அவர்களது போஸ்டர்களை உத்தர பிரதேசத்தில் உள்ள பிரபல சாலை சந்திப்புகளில் வைக்கும்படி முதல்வர் யோகி உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில், ஆபரேசன் துராசாரி என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மகளிர் போலீசார், இதுபோன்ற சமூக குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதேபோன்று அவர்களுக்கு பின்புலத்தில் பக்கபலம் ஆக செயல்படும் நபர்களையும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்கு முன் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடக்கி, ஒடுக்க ஆன்டி ரோமியோ போலீஸ் படையை அமைத்து கடும் நடவடிக்கை எடுக்க யோகி உத்தரவிட்டார்.  எனினும், உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்த நிலையில், முதல் மந்திரி இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory