» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனாவில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்!!

வெள்ளி 25, செப்டம்பர் 2020 11:05:28 AM (IST)

கரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 39 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 91 ஆயிரத்து 149 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 23 லட்சத்து 94 ஆயிரத்து 825 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 75 லட்சத்து 3 ஆயிரத்து 76 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 63 ஆயிரத்து 318 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கரோனா தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 87 ஆயிரத்து 66 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 39 லட்சத்து 4 ஆயிரத்து 683 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 46,74,988
அமெரிக்கா - 44,31,052
பிரேசில் - 40,23,789
ரஷியா - 9,29,829
கொலம்பியா - 6,74,961
பெரு - 6,36,489
தென் ஆப்ரிக்கா - 5,95,916


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory