» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சவுதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

வியாழன் 24, செப்டம்பர் 2020 4:58:19 PM (IST)

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சவுதியில் இருந்து பயணிகளை விமானம் மூலம் இந்தியா அழைத்து வர அந்நாடு அனுமதி அளித்திருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் இந்தியா, பிரேசில், ஆா்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்ல சவுதி அரேபியா தடை விதித்திருந்தது. ஆனால் தற்போது, இந்தியாவில் இருந்து விமானங்கள் மூலம் பயணிகளை சவுதி அரேபியாவுக்கு அழைத்த வர மட்டும் தடை நீடிப்பதாகவும், சவுதி அரேபியாவில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி கிடைத்திருப்பதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்து அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில்,‘கரோனா நோய்த்தொற்று அதிகரித்து காணப்படும் இந்தியா, பிரேசில், அா்ஜெண்டினா ஆகிய நாடுகளின் விமானங்களின் வருகை, புறப்பாடுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்படுகிறது. கடந்த 14 நாள்களுக்கு முன்னதாக இந்த நாடுகளில் இருந்து வந்திறங்கிய பயணிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும். இந்த உத்தரவு தனியாா் உள்பட அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பெரும்பாலான இந்தியா்கள் புலம்பெயா்ந்த தொழிலாளா்களாக பணியாற்றி வருகிறாா்கள். இந்நிலையில், ஆகஸ்ட் 28, செப்டம்பா் 4 ஆகிய தேதிகளில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட இரு பயணிகள் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றால், ஐந்து நாள்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வரும் ஏா் இந்தியா விமானங்களுக்கு 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு சனிக்கிழமை முதல் ஏா் இந்தியா சேவை மீண்டும் தொடங்கியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory