» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கர்நாடகா முதல்வர், ஆந்திர முதல்வர் வழிபாடு!!

வியாழன் 24, செப்டம்பர் 2020 10:48:05 AM (IST)கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவம் விழாவையொட்டி ஏழுமலையானுக்கு வஸ்திரம் சமர்ப்பித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. 27ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் இந்த பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது. திருமலைக்கு சென்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் முதல்வர் ஜெகன் மோகன் திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று சமர்ப்பித்தார். தொடர்ந்து பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இரவு நடந்தது. இதில், முதல்வர் ஜெகன் மோகன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சுவாமி தரிசனத்திற்கு பிறகு, இருவரும் நாத நீராஞ்சன மண்டபத்தில் நடைபெறும் சுந்தர காண்ட பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.  ஆந்திர முதல்வருடன், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர், அமைச்சர்கள்,நடிகை ரோஜாஆகியோர் உடனிருந்தனர். பின்னர் 8.10 மணிக்கு கோவில் பின்புறம் கர்நாடக அரசு சார்பில் ரூ.200 கோடியில் கட்டப்பட உள்ள பக்தர்களுக்கான ஓய்வறைக்கு முதல்-அமைச்சர்கள் ஜெகன்மோகன் ரெட்டி, எடியூரப்பா ஆகியோர் அடிக்கல் நாட்டுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory