» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தி பேசும் மாநிலங்கள் தென்னிந்திய மொழிகள் கற்க வேண்டும்: வெங்கையாநாயுடு

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 10:49:57 AM (IST)

"இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற ஏதாவது ஒரு மொழியை கற்க வேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி தினத்தை முன்னிட்டு, மதுபன் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா கலந்து கொண்டு பேசினார். "நமது அனைத்து மொழிகளும் வளமான வரலாறை கொண்டுள்ளன. நமது மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். தென்னிந்திய இந்தி பிரசார சபையை மகாத்மா காந்தி 1918ம் ஆண்டு ஏற்படுத்தினார். , இந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று நிறைவை ஏற்படுத்தும் வகையில் பார்க்கப்பட வேண்டும்.

மக்களிடையே நல்லெண்ணம், அன்பு மற்றும் பாசத்தை அதிகரிக்க, இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தி கற்க வேண்டும். அதேநேரம் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற ஏதாவது ஒரு மொழியை கற்க வேண்டும்” என்று வெங்கையா ஆலோசனை கூறினார். தேசிய கல்வி கொள்கை 2020-ல் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், "ஒருங்கிணைந்த கல்விக்கு, தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். இது பாடத்தை குழந்தைகள் புரிந்து கொண்டு படிக்கவும், சிறப்பாக வெளிப்படுத்தவும் உதவும்’’ என்று கூறினார்.


மக்கள் கருத்து

nishaSep 15, 2020 - 02:42:00 PM | Posted IP 162.1*****

Very Correct

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory