» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவது நியாயமே - ப.சிதம்பரம்

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 10:24:14 AM (IST)

தமிழ் இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவது நியாயமே என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இன்று (நேற்று) இந்தி தினம் என்று இந்தி மொழி பேசும் மக்கள் பெருமைப்படுகிறார்கள். அவரவர் மொழியை அவரவர் கொண்டாடுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். தமிழ் மொழி இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே.

கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் தொல்லியல் அகழாய்வுகள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளன என்பதும் நமக்கு பெருமையளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory