» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்

புதன் 12, ஆகஸ்ட் 2020 3:46:16 PM (IST)

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி நள்ளிரவு ராணுவ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், மருத்துவப் பரிசோதனையில் அவரது மூளை ரத்த நாளத்தில் மிகப்பெரிய ரத்த அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதால், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் தற்போது வரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory