» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: குழந்தை உள்பட 5பேர் பலி

புதன் 12, ஆகஸ்ட் 2020 12:09:20 PM (IST)



கர்நாடகாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் அருகில் உள்ள ஹிரியூர் என்ற இடத்தில் நேற்றிரவு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. பஸ்சில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் அலறியடித்து கீழே இறங்க முயற்சித்தனர். அதற்குள் தீ பஸ் முழுவதும் பரவியது. இதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory