» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் சோதனை அடிப்படையில் ஆக.15-க்குப் பிறகு 4ஜி சேவை : மத்திய அரசு தகவல்

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2020 5:47:59 PM (IST)ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் இரு மாவட்டங்களில் சோதனை முயற்சியாக 4ஜி இணையச் சேவை அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கு செல்லிடப்பேசி மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் தகவல் தொலைத்தொடர்பு சேவை வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், ஜம்மு-காஷ்மீரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் 4ஜி இணையதள சேவையை மீண்டும் வழங்குவதற்கான சூழலை ஆராயுமாறு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு கூறியிருந்த நிலையில், இன்றைய விசாரணையின்போது, ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்டமாக இரு மாவட்டங்களில் மட்டும் சோதனை முயற்சியாக 4ஜி இணையச் சேவை அளிக்கப்படும் என்றும் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறும் இந்த சோதனையின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. 

மேலும், அனைத்துப் பகுதிகளுக்கும் இணைய சேவை வழங்கினால், மக்களின் அமைதிக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்துவிடும் என்றும் மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory