» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புதிய கல்விக் கொள்கை இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 12:17:07 PM (IST)

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கை குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. தமிழகத்தில் பல்வேறு கட்சியினர், புதிய கல்வி கொள்கையின் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல அம்சங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் எம்.பில் படிப்பு ரத்து உள்ளிட்ட உயர் கல்வித்துறை தொடர்பான அம்சங்களுக்கு ஆதரவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகமும் பல்கலைக் கழக மானிய குழுவும் இணைந்து புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உறையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க, புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கையில் எந்த விதமான சார்புகளும் இல்லை என்று கூறிய அவர் தாய்மொழி கல்வி மூலம் மாணவர்களின் அடித்தளம் சிறப்பாக இருக்கும் என்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் மாணவர்கள் இனி படிப்பை பாதியில் நிறுத்த தேவையில்லை என்றும் பாதியில் படிப்பை நிறுத்தியவர்கள் புதிய கல்விக் கொள்கையால் படிப்பை தொடரலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

JJJJJJAug 9, 2020 - 10:52:29 AM | Posted IP 173.2*****

First You Study.

ஆசீர். விAug 7, 2020 - 05:26:09 PM | Posted IP 162.1*****

செயலில் ஒன்னும் இல்ல சொல்லில் மட்டும் வீரர். எல்லாத்துக்கும் நேரு தான் காரணம் என்று சொல்லி சொல்லி இன்று நேரு காலத்துக்கும் பின்னாடி போய் விட்டது இந்தியா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory