» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இனி நகைக் கடன்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும்: தங்கத்துக்கு நிகராக கடன் மதிப்பை உயர்த்திய ஆர்பிஐ!

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 5:33:32 PM (IST)

தங்கத்துக்கு நிகரான கடன் மதிப்பை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதன் மூலம் இனி தங்க நகைக்கு கூடுதல் தொகையை கடனாகப் பெற வழிவகைக் காணப்பட்டுள்ளது.

வேளாண் துறை சாராத பயன்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட தங்கத்துக்கு நிகரான கடன் தொகையை 75% ல் இருந்து 90% ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை பொது மக்களும், தொழில் முனைவோரும் எதிர்கொள்ள வசதியாக, வேளாண் துறை அல்லாத பிற பயன்பாட்டுக்கு கடன் பெறுவோருக்கான தங்கத்துக்கு நிகரான கடன் மதிப்பை 75%ல் இருந்து 90% ஆக உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தளர்வு 2021ஆம் ஆண்டு மார்ச் 21 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை வேளாண் துறை அல்லாத பிற பயன்பாட்டுக்கு, ஒரு தங்க நகை மற்றும் தங்க ஆபரணங்களின் மதிப்பில் 75% மிகாமல் கடன் வழங்க வேண்டும் என்பதே ஆர்பிஐயின் கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லாமல் நிர்ணயித்து அறிவித்த ஆர்பிஐ, கரோனா பேரிடர் காரணமாக பொருளாதாரம் மிகமோசமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory