» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் 46 ஆண்டு இல்லாத அளவுக்கு கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 4:00:27 PM (IST)மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. கொலாபா பகுதியில் 46 ஆண்டு இல்லாத அளவுக்கு  மழை கொட்டித் தீர்த்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மும்பையில் கன மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் பெருத்த சேதத்தினை மும்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக, தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  நேற்று மழை பதிவானது. அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கேட் வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து தொடங்கும் மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொலாபா பகுதியில் ஒரே நாளில் 333.8 மி.மீட்டர் மழை பதிவானது. இது 1974-ம் ஆண்டுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் பெய்த மிக அதிக அளவு மழை பொழிவாகும். மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் 64 சதவீதம், முதல் 5 நாட்களிலேயே  பெய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory