» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் தீவிபத்து: கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த 8 பலி

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 12:04:13 PM (IST)ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 41 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியதாவது, மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும். தீ விபத்தில் படுகாயம் அடைந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் எனக் கூறினார். மேலும் மருத்துவமனை தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக கூடுதல் தலைமை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory