» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடி பதவிப்பிரமாணத்தை பகிரங்கமாக மீறிவிட்டார்: ஒவைசி குற்றச்சாட்டு

புதன் 5, ஆகஸ்ட் 2020 5:54:05 PM (IST)

ராமர் கோயில் பூமிபூஜையில் பங்கேற்றதன் மூலம் பதவிப்பிரமாணத்தை மோடி மீறிவிட்டதாக ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

அயோத்தியில் ராமர்கோயில் கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இது குறித்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது, இந்தியா மதச்சார்பின்மை கொண்ட நாடு. இத்தகைய நாட்டில் ராமர் கோயில் பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரதமர் நரேந்திரமோடி பகிரங்கமாக பதவிப்பிரமாணத்தை மீறியுள்ளார். 

ராமர் கோயிலுக்கு பூமிபூஜை செய்யப்பட்ட இந்த தினம், ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் தோற்ற தினம். இந்துத்துவா வென்ற தினம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ராமர் மீது கொண்ட நம்பிக்கையால் பிரதமர் நரேந்திர மோடி இன்று உணர்ச்சிவசப்பட்டதாக மேடையில் கூறினார். நானும் அந்த அளவுக்கு இன்று உணர்ச்சிவசப்பட்டேன். ஏனென்றால் நான் சகமனித வாழ்வு மற்றும் சம உரிமையின்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.

பிரதமர் மோடி ராமர் கோயில் பூமிபூஜையில் கலந்துகொள்ளக் கூடாது எனக் கூறினேன். ஏனென்றால் மதச்சார்பின்மை கொண்ட நாட்டில் ஒருமதம் சார்ந்த பூமிபூஜை நிகழ்ச்சியில் மட்டும் பிரதமர் கலந்துகொள்வதால் அந்த மதம் சார்ந்த நம்பிக்கைகளை மட்டுமே பெரும்பான்மையானோர் நம்பவேண்டும் என்ற நிலை உருவாகிறது. நாட்டிற்கு மதம் இல்லை. இந்தியாவும், அதனை ஆளும் அரசும் மதத்தை கொண்டுள்ளதா?. மோடி இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கூட பிரதமர் தான். அதனால் பிரதமராக இத்தகைய செயல்களில் அவர் (நரேந்திர மோடி) ஈடுபடக்கூடாது இவ்வாறு ஒவைசி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory