» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

சனி 11, ஜூலை 2020 5:42:46 PM (IST)

கரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

நாட்டில் கரோனா நிலைமை குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சர்ளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களில் நிலவும் கரோனா நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது: டெல்லியில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். 

பொது இடங்களில் மக்கள் சுகாதாரம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுகள் என தெரிவித்தார். ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர், அமைச்சரவை செயலாளர் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்,


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory