» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளத்தில் தங்கம் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
வெள்ளி 10, ஜூலை 2020 3:37:50 PM (IST)
கேரள தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்தக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
தலைமறைவாக இருக்கும் அவரையும், அவரது நண்பரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ள நிலையில், ஸ்வப்னா சுரேஷ் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து உள்ளார். ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ள அந்த மனுவில் அவர், தனக்கும், தங்கம் கடத்தல் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை எனவும், தனக்கு எந்த குற்ற பின்னணியும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து தங்கத்தை வெளியே கொண்டு வர முடியாததால், ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரியான ரஷித் காமிஸ் தன்னை தொடர்பு கொண்டதாகவும், அதன் பேரில்தான் சுங்க அதிகாரிகளை தான் தொடர்பு கொண்டதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த மனு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை எடுக்கப்போவதால், உயர் நீதிமன்றம் இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது. ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றே விசாரிக்க முடியும் என்று வாதிட்டார். இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவிட மறுப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 4:52:58 PM (IST)

கரோனா தடுப்பூசி வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை
ஞாயிறு 17, ஜனவரி 2021 3:45:48 PM (IST)

மக்கள் இதயங்களில் எம்.ஜி.ஆர். வாழ்கிறார்: பிரதமர் மோடி புகழாரம்
ஞாயிறு 17, ஜனவரி 2021 3:42:48 PM (IST)

மணிப்பூரில் ஜன.27 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
ஞாயிறு 17, ஜனவரி 2021 3:39:57 PM (IST)

நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: பிரதமர் தொடக்கி வைத்தார்
சனி 16, ஜனவரி 2021 12:08:01 PM (IST)

சபரிமலையில் மகர விளக்கு பூஜை : திரளான பக்தர்கள் தரிசனம்
சனி 16, ஜனவரி 2021 9:08:31 AM (IST)
