» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் கரோனா சமூக பரவலாக மாறவில்லை: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

வியாழன் 9, ஜூலை 2020 4:26:04 PM (IST)

இந்தியாவில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷர்தன் தலைமையில் நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது, மருத்துவ கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், நாட்டில் கரோனா சமூக பரவலாக மாறவில்லை என நிபுணர்கள் தெரிவித்ததாக கூறினார். 

ஒரு சில பகுதிகளில் தொற்று அதிகமாக உள்ள நிலையில், சமூக தொற்றாக மாறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கரோனா பரவலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். உலகில் பத்து லட்சம் பேருக்கு ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் 538 ஆக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory