» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு

செவ்வாய் 7, ஜூலை 2020 9:00:13 AM (IST)

கொரோனா பாதிப்பால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டித்துள்ளது.

இது குறித்த வருமான வரித்துறையின் டிவிட்டர் பதிவில் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு வருமான வரி தொடர்புடைய விவகாரங்களில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும் அந்த வரிசையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை ஏற்கனவே 2019 - 20 வருமான வரித்தாக்கலுக்கான கால அவகாசத்தை நவம்பர் 30ந் தேதி வரை நீட்டித்தது.  அதேபோன்று வரிசேமிப்பு முதலீடு மற்றும் டி.டி.எஸ். தாக்கலுக்கு ஜூலை 31 வரையும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory