» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆகஸ்ட் 15 முதல் கரோனா தடுப்பூசி என்பது அறிவியல் பூர்வமற்ற முடிவு: கபில்சிபல் கருத்து

திங்கள் 6, ஜூலை 2020 5:21:29 PM (IST)

ஆகஸ்ட் 15 முதல் கரோனா சிகிச்சையில் தடுப்பூசி பயன்படுத்தப்படும் என்ற முடிவு அறிவியல் பூர்வமற்ற முடிவு என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றிபெறும் பட்சத்தில், வருகிற ஆகஸ்ட் 15 முதல் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் குறித்த ஆய்வில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தியா முதல்முறையாக தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளது. முறையான சோதனைக்கு பின்னர் வருகிற ஆகஸ்ட் 15 முதல் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

தடுப்பு மருந்து கண்டறிந்து சோதனையில் ஈடுபடுத்தி பயன்பாட்டிற்கு வர குறைந்த ஒரு வருட காலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குற்றஞ்சாட்டியுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், வழக்கறிஞருமான கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில்,  "அறிவியல்பூர்வமற்ற முடிவுகள்: ஆகஸ்ட் 15 க்குள் கரோனா தடுப்பூசி: ஐசிஎம்ஆர் உரிமை கோரல் 18 நாட்களில் மகாபாரதம் முடிந்தது; அதேபோன்று 21 நாட்கள் காத்திருங்கள், இந்த போரில் வென்றுவிடுவோம். கரோனா கோ, கரோனா கோ என்ற கோஷங்கள்; பசு சாணம் புற்றுநோயை குணப்படுத்தும்; கடவுள் கணேஷின் தலை: அறுவை சிகிச்சையின் அதிசயம்; இத்தகைய மனநிலை ஒருபோதும் தீர்வுகளை வழங்காது" என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory