» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கடன் வாங்க வேண்டிய நிலை : மகாராஷ்டிர அமைச்சர்

வியாழன் 2, ஜூலை 2020 6:33:12 PM (IST)

வரும் மாதத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்று மகாராஷ்டிர அமைச்சர் விஜய் வாடேதிவர் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தெரிவித்ததாவது், மத்திய அரசிடமிருந்து மகாராஷ்ரத்திற்கு நிதியுதவி எதுவும் கிடைக்கவில்லை. யாரவது ஒரு தலைவர் மாநிலத்திற்கு நிதியுதவி கிடைப்பதாகக் கூறினால் அவர்கள் இந்த மாநிலத்தை எமாற்றுகிறார்கள் என்று அர்த்தம். அதேநேரம் சூழல் எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்றால் அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கடன் வாங்க வேண்டிய நிலையை நோக்கி மாநில அரசு செல்கிறது. ஒருசில துறைகளைத் தவிர பெரும்பாலான துறைகளில் செலவுகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மாணவர்களுக்கு நிதியுதவி அழைக்கும் சார்தி திட்டத்திற்கு பாதிப்பு என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டு, தகவல் பரப்புகிறார்கள். அதில் அரசியல் செய்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. மாணவர்களுக்கு நிதியுதவி தொடரும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory