» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு : புதிய தளர்வுகள் அறிவிப்பு

சனி 30, மே 2020 7:09:43 PM (IST)

நாடு முழுவதும் கரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான 4-ஆம் கட்ட பொது முடக்கம் நாளை நிறைவடைகிறது. இந்த நிலையில், 5-ஆம் கட்டமாக ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் ஜூன் 8 முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படிவழிபாட்டுத் தலங்கள், மால்கள், ஹோட்டல் போன்ற பிற தொழில்கள் ஆகியவற்றையும் ஜூன் 8 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஜூலை மாதத்தில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும். பெற்றோர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, கல்வி நிறுவனங்களைத் திறப்பது பற்றி மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.பன்னாட்டு விமானப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுக் கூடங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றைத் திறப்பது பற்றி நிலைமையைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory