» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை!

புதன் 27, மே 2020 5:04:27 PM (IST)



குஜராத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு வந்து சேர்ந்த பெண் இறந்துவிட்ட நிலையில், அதை அறியாத அவரது குழந்தை அவரை எழுப்ப முயன்ற சம்பவம் அனைவரையும் வேதனை அடையச் செய்தது.

ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறுகிறது. இந்நிலையில் பீகாரில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவம், புலம்பெயர் தொழிலாளர்களின் சோகத்திற்கு முடிவே இல்லையா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

குஜராத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் இறந்துவிட்டார். சரியாக சாப்பிடாததால் ரயிலில் ஏறும்போதே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பசி, உடல் வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர்ச்சத்து குறைந்த நிலையில், ரயில் முசாபர்பூரை நெருங்கும்போது அவர் இறந்துள்ளார். அவரது உடல் ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாய் இறந்ததை அறியாத அவரது பச்சிளம் குழந்தை, தாயை எழுப்ப முயற்சிக்கிறது. 

தாய் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை இழுக்கிறது. அந்த குழந்தையை மூத்த குழந்தை தடுத்து வெளியே இழுக்கிறது. இதைப் பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதே ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தையும் உயிரிழந்துவிட்டது. அந்த குழந்தையின் பெற்றோர் டெல்லியில் இருந்து வந்த மற்றொரு சிறப்பு ரெயில் மூலம் வந்தவர்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory