» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்

புதன் 27, மே 2020 11:42:13 AM (IST)

கர்நாடகத்தில் மே 31 ஆம் தேதிக்குப் பிறகு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 4 ஆம் கட்டமாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட அதே வேளையில், கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளன. இந்நிலையில், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கடைகள் திறக்க, மாநில எல்லைக்குகள் பேருந்து மற்றும் ரயில்களை இயக்க என சில சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

மேலும், குஜராத், மகாராஷ்டிரம், கேரளம் மற்றும் தமிழகத்தில் இருந்து பொதுமக்கள் மே 31 வரை கர்நாடகத்துக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார். இதையடுத்து, மே 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மே 31 ஆம் தேதிக்குப் பிறகு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்க முடிவு செய்துள்ளதாக எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory