» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது!!

புதன் 27, மே 2020 10:19:14 AM (IST)காஷ்மீர் பகுதியில் ரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறாவை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹிரா நகர் பகுதியில் உள்ள மன்யாரி கிராமத்துக்குள் நேற்று முன்தினம் புறா ஒன்று பறந்து வந்துள்ளது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்ததால், சந்தேகமடைந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புறாவைப் பிடித்து உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்தப் புறாவை போலீஸாரும் பாதுகாப்பு படையினரும் பரிசோதித்தனர். அப்போது அதன் ஒரு காலில் மோதிரம் போன்ற வளையம் மாட்டப்பட்டிருந்தது. அதில் ரகசிய குறியீடாக சில எண்களும் இருந்தன. 

இந்திய பகுதிகளை உளவு பார்க்கவோ அல்லது வேறு ஏதேனும் சங்கேத வார்த்தைகளை தெரிவிப்பதற்கோ பாகிஸ்தானில் இருந்து புறா அனுப்பப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். எதற்காக புறா அனுப்பப்பட்டது? புறாவின் காலில் இருந்த வளையத்தில் உள்ள எண்கள் எதைக் குறிக்கின்றன என்று தெரிந்து கொள்வதற்கான ஆய்வில் புலனாய்வு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதை கதுவா மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் ஷைலேந்திர மிஸ்ரா தெரிவித்தார். ரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து உளவுப் புறா அனுப்பப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory