» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்

செவ்வாய் 26, மே 2020 5:03:39 PM (IST)வடமாநிலங்களில் வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க விவசாயிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னால் வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகளின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்தது. அத்துடன் விளைச்சலுக்கும் அவை கடுமையான் சேதத்தை உண்டாக்கின. தற்போது பாகிஸ்தானுடன் எல்லைப்பகுதியில் இருக்கும் வடமாநிலங்களில் வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்கமானது ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் குறிப்பாக செஹோர் மாவட்டத்தில் புத்னி மற்றும் நஸ்ருலாகஞ்ச் ஆகிய பகுதிகளில் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. 

இந்நிலையில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, செஹோர் மாவட்ட விவசாயிகள் புதிய வழிமுறை ஒன்றைக் கையாண்டு வருகின்றனர்.அதன்படி அவர்கள் கூட்டமாகக் கூடி பாத்திரங்களைத் தட்டி ஓசை  எழுப்புவதால் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களை தடுக்கிறார்கள். அத்துடன் பயிர்கள் மற்றும் மரங்களில் கிருமிநாசினிக் கரைசல்களைத் தெளிப்பது உள்ளிட்ட வழக்கமான செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது இந்த செயல்பாடுகளை மாநில வேளாண் விஞ்ஞானிகள் வெகுவாகப் பாராட்டுவதோடு தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து

அருண்மே 27, 2020 - 11:16:08 PM | Posted IP 103.1*****

100 வெட்டுக்கிளி புடிச்சு கொண்டு வந்தா ஒரு கோட்டார்னு சொல்லித்தான் பாருங்களேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory