» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும்- பிரதமர் மோடி உறுதி

சனி 23, மே 2020 4:30:20 PM (IST)

கரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவு மற்றும் உதவிகளையும் இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி  இன்று இலங்கை அதிபர்  கோத்தபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடினார், தற்போது நடைபெற்று வரும் கரோனா தொற்றுநோய் மற்றும் பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து இருவரும் பேசினர். 

இரு தலைவர்களும் இந்திய தனியார் துறையால் இலங்கையில் முதலீடுகள் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதித்தனர். கரோனாவின் விளைவுகளைத் தணிக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அனைத்து ஆதரவையும் அளிக்கும் என்றும் பிரதமர் இலங்கை அதிபருக்கு உறுதியளித்தார். இலங்கையில் இந்திய உதவியுடன் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory