» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜூன் 1 முதல் இயக்கப்படும் 200 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது

வியாழன் 21, மே 2020 12:18:18 PM (IST)ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள 200 ரயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.  

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால், ரயில், பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்களை நாடு முழுவதும் ரயில்வே இயக்கி வருகிறது.  இந்த நிலையில்,  ஜூன் 1ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் தெரிவித்தார். 

அதன்படி ஏசி வசதி இல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரயில்களை நாடு முழுவதும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 200 ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  அதில் தமிழகத்திற்கான எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை. 200 ரயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.  இந்த ரயில்களில் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யப்படும். ஆர்.ஏ.சி, காத்திருப்போர் பட்டியலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும். எனினும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் ரயில்களில் பயணம் செய்ய எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory