» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் கரோனா மீட்பு விகிதம் 39.62% ஆக அதிகரிப்பு : மத்திய சுகாதாரத் துறை தகவல்

புதன் 20, மே 2020 7:01:48 PM (IST)

இந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 39.62% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால்  கூறினார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:உலக அளவில் ஒரு லட்சத்துக்கு 62 பேர் என்ற விகிதத்தில் கரோனா பாதிப்பு உள்ளது. அதுவே, இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு 7.9 பேர் என்ற விகிதத்தில் கரோனா பரவி வருகிறது. அதேநேரத்தில் சுமார் 39.62% பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையில் 2.94% பேர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடனும், 3% பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 0.45% பேர் வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, உலக அளவில் இறப்பு விகிதம் ஒரு லட்சத்துக்கு 4.2 பேர் என்ற நிலையில், இந்தியாவில் அது 0.2 என உள்ளது.

தொடர்ந்து கரோனா மீட்பு விகிதம் அதிகரித்து வருகிறது. முதல் கட்ட ஊரடங்கின்போது 7.1% ஆக இருந்த மீட்பு விகிதம் இரண்டாம் கட்ட ஊரடங்கின்போது 11.42% ஆகவும், தொடர்ந்து 26.59% ஆகவும் தற்போது 39.62% ஆகவும் அதிகரித்துள்ளது. சிகிச்சை முறையில் இது திருப்தி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory